புஜ்யஶ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சங்கராசார்ய ஸ்வாமிஜி அவர்களின் 78 வது ஜெயந்தி விழா
புஜ்யஶ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சங்கராசார்ய ஸ்வாமிஜி அவர்களின் 78 வது ஜெயந்தி விழா காஞ்சிபுரத்தில் August 3, 2012 அன்று மிக விசேஷமாக கொண்டாடப்பட இருக்கிறது. August 1, 2012 முதல் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் துவங்கவுள்ளது.
அன்றைய சுப தினம் ஶ்ரீ மடத்தில் சுப்ரபாதம் மற்றும் ஶ்ரீ பெரியவாளின் விஸ்வரூப தரிசனத்துடன் துவங்கும்.
மஹோத்ஸவம் அன்று வேத பாராயணம், ஹோமம், வித்வத் சதஸ் மற்றும் ஆன்மீக சொற்பொழிவு ஶ்ரீ மடத்தில் நடைபெறவுள்ளன. ஸ்ரீ பெரியவா ஜெயந்தி அன்று காலை 5 மணி அளவில் ஶ்ரீ ஆசார்ய ஸ்வாமிகள் விஸ்வருப தரிசனம் அளிப்பார்கள். 78 நாதஸ்வர மற்றும் தவில் வித்வான்கள் இணைந்து ஸ்ரீ ஆசார்ய ஸ்வாமிகளுக்கு மங்களவாத்ய நாத சுமன்ஜளி ஸமர்பனம் செய்வார்கள். பின்னர் வேத பாராயணம், ஹோமம், வித்வத் சதஸ், ஆன்மீக சொற்பொழிவு மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் ஶ்ரீ மடத்தில் நடைபெறவுள்ளன.
கீழே விவரிக்கபட்டுள்ள இசை கச்சேரிகள் ஶ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் ஆஸ்தான வித்வான்களால் நடைபெறவுள்ளன:
Aug 1 - வயலின் இசை கச்சேரி - ஸ்ரீ கனேஷ் மற்றும் ஸ்ரீ குமரேஷ்
Aug 2 - வீணை இசை கச்சேரி - ஸ்ரீ ராஜேஷ் வைத்யா
Aug 3 - மன்டொலின் இசை கச்சேரி - ஸ்ரீ ஸ்ரீநிவாஸ் மற்றும் ஸ்ரீ ராஜேஷ்
பக்தர்கள் ஸ்ரீ பெரியவா ஜெயந்தி விழாவில் கலந்து கொண்டு பூஜ்ய ஶ்ரீ ஆசார்ய ஸ்வாமிகளின் அனுக்கிரஹத்தை பெறவேண்டும் என்று கேட்டு கொள்கிறோம்.